வேர்கடலையை அதிகம் சாப்பிடும் முன் இதை கவனியுங்கள்!! இல்லையென்றால் பெரும் ஆபத்து!!

Photo of author

By Rupa

நம் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவுப்பொருள் வேர்க்கடலை.இதன் சுவை மற்றும் வாசனையால் பலரும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.இது வேர்க்கடலை மிட்டாய்,வேர்க்கடலை வெண்ணெய்,வேர்க்கடலை பவுடர் என்று பல வகைகளில் விற்கப்படுகிறது

வேர்க்கடலையில் நார்ச்சத்து,தாதுக்கள்,கொழுப்பு,வைட்டமின்கள் அதிகளவு காணப்படுகிறது.ஆனால் அளவிற்கு அதிகமாக வேர்க்கடலை சாப்பிட்டால் உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும்.

அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் வேர்க்கடலையில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் அதை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் நிச்சயம் உடல் நலத்தில் பிரச்சனை ஏற்படும்.

வேர்க்கடலையில் ஒழிந்திரும் ஆபத்துகள்:

மோனோ மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் என்ற கொழுப்புகள் வேர்க்கடலையில் அதிகம் நிரம்பி இருப்பதால் அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது உடலில் கொழுப்புச்சத்து அதிகரித்து உடல் எடை கூடிவிடும்.

வேர்க்கடலையில் இருக்கின்ற ஆக்சலேட்டுகள் சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கிவிடும்.எனவே சிறுநீரக தொற்று,சிறுநீரக கல் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் வேர்க்கடலை தவிர்க்க வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதயம் தொடர்பான பாதிப்பு இருப்பவர்கள் வேர்க்கடலையை அதிகளவு சாப்பிடக் கூடாது.வேர்க்கடலையில் உள்ள கொழுப்புச்சத்து மாரடைப்பை ஏற்படுத்திவிடும்.

இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் வேர்க்கடலையை குறைவான அளவே சாப்பிட வேண்டும்.சிலருக்கு அதிகளவு வேர்க்கடலை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு,வயிறு உப்பசம் ஏற்படும்.கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் வேர்க்கடலை உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும்.