மனைவியை கொல்ல சதி திட்டம்! ஏழு பேர் படுகாயம்!! கணவனின் வெறிச்செயல்!

Photo of author

By Hasini

மனைவியை கொல்ல சதி திட்டம்! ஏழு பேர் படுகாயம்!! கணவனின் வெறிச்செயல்!

Hasini

Conspiracy to kill wife! Seven injured !! Husband's hysteria!

மனைவியை கொல்ல சதி திட்டம்! ஏழு பேர் படுகாயம்!! கணவனின் வெறிச்செயல்!

பெண்களின் மீது வஞ்சம் வைத்து பழிவாங்கும் செயல்கள் பல நடந்தேறிக் கொண்டே உள்ளது நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகிறது.ஏதோ ஒரு முனையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து கொண்டேதான் உள்ளது.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் நான்ஜிங் நகரில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது திடீரென கார் ஒன்று அதிவேகமாக வந்து பலமாக மோதியது.  இதில், ஒரு பெண், அவரது தோழி மற்றும் மேலும் ஒரு நபர் பலத்த காயமடைந்துள்ளனர்.

காரில் வந்த நபர் பெண் மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளார்.  அவரை தடுத்த பெண்ணின் தோழி மற்றும் அங்கிருந்தவர்களை, அந்நபர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார்.  இதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த 7 பேரும் மற்றும் தாக்குதல் நடத்திய நபரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு வாரத்திற்குள் நடந்த 2வது பழிவாங்கும் தாக்குதல் இதுவாகும்.  இதே போல், கடந்த வாரம், சீனாவின் வடகிழக்கே டாலியன் நகரில் நடந்து சென்று கொண்டிருந்த கூட்டத்தில் நபர் ஒருவர் காரை மோத செய்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

அவரை கைது செய்து விசாரித்ததில், அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதற்கு சமூகத்தில் உள்ளவர்களை பழிவாங்குவது என்ற முடிவுக்கு வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.