மலச்சிக்கல் முதல் குடற்புழு பாதிப்பு வரை.. இந்த காயை சாப்பிட்டால் ஒரே நாளில் தீர்வு கிடைக்கும்!!

Photo of author

By Rupa

சாம்பார்,பொரியல்,காரக்குழம்பு உள்ளிட்ட உணவு வகைகளில் முருங்கை காய் சேர்க்கப்படுவது வழக்கம்.முருங்கை காய் உணவின் சுவையை அதிகரிப்பதோடு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.சீசன் இருந்தாலும் இல்லையென்றாலும் முருங்கை காய்க்கு மட்டும் எப்பொழுதும் தனி மவுசு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

முருங்கை காய் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்பது பலரும் தெரிவிக்கின்றனர்.ஆனால் முருங்கை உடலில் பல நோய் பாதிப்புகளுக்கு மருந்தாக திகழ்கிறது.முருங்கை காய் சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு சீராகும்.முருங்கை காயில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகம் நிறைந்திருக்கிறது.இதை தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் முருங்கை காயை வேகவைத்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.முருங்கை காயில் இருந்து சாறு எடுத்து அருந்தினால் குடல் இயக்கம் சீராகும்.முருங்கை காயில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் இதை சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனையை சீராக்கும்.

முருங்கை காயில் உள்ள பருப்பை காயவைத்து பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வந்தால் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.ஆண்மை தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய முருங்கை காய் பெரிதும் உதவுகிறது.சுவாசம் தொடர்பான பாதிப்புகள் குணமாக முருங்கை காய் எடுத்துக் கொள்ளலாம்.இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகளவு நிறைந்திருக்கிறது.இது சுவாசம் தொடர்பான பாதிப்புகளில் இருந்து மீள உதவுகிறது.

முருங்கை காயில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகளவு நிறைந்திருக்கிறது.இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் எலும்புகள் பலப்படும்.முருங்கை காய் பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் குடற்புழு பாதிப்பு சரியாகும்.