பெரியகுளம் காவல் நிலைய வளாகத்தில் டிஎஸ்பி கீதா தலைமையில் ஆலோசனை கூட்டம்! 

Photo of author

By Rupa

பெரியகுளம் காவல் நிலைய வளாகத்தில் டிஎஸ்பி கீதா தலைமையில் ஆலோசனை கூட்டம்!
 தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில்  வருகின்ற 31.8.2022 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  பல்வேறு அமைப்பினர் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட உள்ள சூழலில் இன்று பெரியகுளம் காவல் நிலைய வளாகத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் கீதா   தலைமையில் காவல் ஆய்வாளர் மீனாட்சி முன்னிலையில் பெரியகுளம் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளிடம்  விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்து தமிழக அரசு மற்றும் தேனி மாவட்ட நிர்வாகமும் பல்வேறு விதிமுறைகளை அறிவித்துள்ளதை தொடர்ந்து அதனை கடைப்பிடித்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர்.