டிஎஸ்பி தலைமையில் விநாயக்கர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம்!

Photo of author

By Rupa

 டிஎஸ்பி தலைமையில் விநாயக்கர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம்!

Rupa

Consultation meeting on Vinayakar Chaturthi procession led by DSP!
 டிஎஸ்பி தலைமையில் விநாயக்கர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம்!
தேனி மாவட்டம் பெரியகுளத்தில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரியகுளம் உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஊர் பெரியோர்கள், முக்கியஸ்தர்கள், பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணயினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசு காட்டும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்திட வேண்டும் எனவும், ஊர்வலத்தின் போது கூச்சல், குழப்பங்கள் விளைவிக்க வேண்டாம் எனவும், பிறர் மனம் புண்படும்படி நடந்து கொள்ள வேண்டாம் எனவும் பெரியகுளம் உட்கோட்டகாவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சி, அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் அன்னமயில், தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் சங்கர், போக்குவரத்து காவல் ஆய்வாளர் வைரமணி, சார்பு ஆய்வாளர்கள், மணிகண்டன், பாண்டியராஜன், வேல்மணிகண்டன், மகேஸ்வரி, தண்டபாணி, ஈஸ்வரன், தன்னார்வலர்கள், இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.