நமது நாட்டில் கோதுமை உணவுகள் சாப்பிடுபவர்கள் ஏராளம்.வட இந்தியர்களின் பிரதான உணவே கோதுமையில் தயாரிக்கப்படும் சப்பாத்தி தான்.கோதுமையில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.சர்க்கரை நோயாளிகள் கூட இந்த கோதுமை உணவை எடுத்துக் கொள்ள விரும்புகின்றனர்.
பல்வேறு நன்மைகள் கொண்ட கோதுமையை உட்கொண்டு ஒரு கிராமமே தலைமுடி உதிர்வு,வழுக்கை பிரச்சனையை எதிர்கொண்டு இருக்கிறது என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது.மகாராஸ்டிரா மாநிலத்தில் உள்ள புல்தானா என்ற மாவட்ட மக்களுக்கு முதிர்வு,வழுக்கை பிரச்சனை அளவிற்கு அதிகமாக அதிகரித்ததாக சொல்லப்படுகிறது.
ரேசன் கடையில் விற்கப்பட்ட கோதுமையை பயன்படுத்தியது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது.இந்த தகவல் தீயை பரவியதை அடுத்து அதிகாரிகள் அதை ஆய்வு செய்தனர்.
கோதுமையில் அதிகளவு செலினியம் என்ற கனிமம் அதிகமாக இருப்பது கண்றியப்பட்டது.இந்த செலினியம் சுமார் 600 மடங்கிற்கும் அதிகமாக இருந்ததால் தான் இதை உட்கொண்டவர்களுக்கு உடல் நலக் கோளாறு,தலை முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது.
இந்த செலினியம் நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய கனிமங்களின் ஒன்றாகும்.இது உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.உடலில் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது.டைப் 2 நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
இருப்பினும் உடலில் செலினியம் அளவு அதிகரித்தால் அவை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.இந்த செலினியம் சத்து அதிகரித்தால் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு தலைமுடி முழுவதும் உதிர்ந்து வழுக்கையாகிவிடும்.அது மட்டுமின்றி மயக்கம்,வாந்தி, பாதிப்புகளும் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.ரேசனில் விற்கப்பட்ட கோதுமையால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதை நினைத்து அனைவரும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர்.செலினியம் சத்து அவசியமான ஒன்று தான் இருப்பினும் இதை அதிகமாக உட்கொள்ளும் பொழுது அவை உடல் ஆரோக்கியத்திற்கு பாதகமாக மாறிவிடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.