தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழை!! போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!! 

Photo of author

By Amutha

தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழை!! போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!! 

வடகிழக்கு பருவமழை காரணமாக பேருந்துகளில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தற்பொழுது தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. பருவ மழை காரணங்களால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பேருந்துகளில் இந்த சமயங்களில் பயணம் செய்வர்.

கனமழை பெய்தாலே அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான பேருந்துகள் ஏராளமானவைகளில் மழைநீர் உள்ளேயே கசியும் சூழ்நிலையில் உள்ளன. அதிலும் மாநகர பேருந்துகளின் நிலையைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே தேவையில்லை. வெளியே நின்று இருந்தால் கூட அந்த அளவு நனைய மாட்டோம். பேருந்தின் உட்புறத்தில் ஏராளமான பயணிகள் முழுவதும் நனைந்த நிகழ்வுகள் ஏராளம் உண்டு.

இதுபோன்ற நிகழ்வுகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு பேருந்துகளுக்கு பராமரிப்பு அவசியம் என தற்போது போக்குவரத்து கழகங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

 அரசு பேருந்துகளில் பராமரிப்பை முழுமையாக உறுதி செய்ய வேண்டும் எனவும் மழை நீரானது பேருந்து உட்புறத்தில் புகுவதை தடுக்க பேருந்து பணிமனைகளில் உரிய பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி பராமரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் மழை நீர் உள்ளே செல்லாத வகையில் மேற்கூரை மற்றும் படிக்கட்டுகளை தொடர்ந்து கண்காணித்து மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த வேண்டும் என அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.