தொடரும் வாட்ஸ் ஆப் செயலி மோசடிகள்! எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

0
377
#image_title

தொடரும் வாட்ஸ் ஆப் செயலி மோசடிகள்! எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

வாட்ஸ் ஆப் செயலி மூலமாக பல்வேறு வகையான மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிரபல சமூக வலைதள செயல்களில் ஒன்றான வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக பல்வேறு வகையான சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் மோசடிகள் நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் “வாட்ச் ஆப் செயலியை பயன்படுத்தி தற்பொழுதைய காலத்தில் ஏழு விதமான குற்றங்கள் நடைபெறுவதை கண்டு பிடித்துள்ளோம். வீடியோ கால் அழைப்பு, வேலை வாங்கி தருவதாக கூறி வரும் அழைப்புகள், ஆள்மாறாட்டம், முதலீட்டு திட்டங்கள், மொபைல் திரையை பகிர்ந்து கொள்ளுதல், மொபைல் போன் கட்டுப்பாட்டை முழுவதையும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொள்வது, மிஸ்டு கால் உள்பட பல்வேறு வகையில் மோசடிகளும் குற்றங்களும் நடைபெற்று வருகின்றது.

ஆள்மாறாட்டம் மோசடியில் பயனாளர்களின் மொபைல் போனை முழுவதையும் தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்து பயனாளர்களின் மொபைலில் உள்ள எண்களுக்கு அழைத்து பணம் கேட்பது, வீடியோ கால் அமைப்பில் ஆடைகள் இன்றி வீடியோ அழைப்பு செய்து அதை வைத்து பணம் கேட்டு மிரட்டுவது போன்ற பல வகைகளில் மோசடிகள் நடைபெறுகின்றது.

தற்பொழுது மிஸ்டு கால் அழைப்பு வருவதும் அதிகரித்து உள்ளது. அதிலும் குறிப்பாக வியட்நாம், எத்தியோபியா, மலேசியா, கென்யா போன்ற நாடுகளின் எண்களில் இருந்து இது போன்ற மோசடி அழைப்புகள் வருகின்றது. இது போன்ற வரும் அழைப்புகளை பயனர்கள் யாரும் எடுக்க வேண்டாம். அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் தகவல்களையும் அமைப்புகளையும் ஏற்க வேண்டாம் நிராகரிக்கவும்” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Previous articleநாடெங்கும் கேட்கும் ராமஜெயம்! விழாக் கோலமாக மாறிய அயோத்தி!
Next articleகேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்! தமிழகத்திற்கு மேலும் இரண்டு தங்கம்!