தொடர்ந்து அதிகரித்து வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை :! அச்சத்தில் பொதுமக்கள்

Photo of author

By Parthipan K

 

தமிழகத்தில் கடந்த ஒரே மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 100 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு இருந்த நிலையில் , தற்போது மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பது நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கச்சா எண்ணெயின் விலை அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் உரிமை எண்ணைய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் , தற்போது 100 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் பணியின்று தவிக்கும் நடுத்தர மக்களிடையே இது பெரும் அச்சத்தை தந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து மானிய தொகையில் வங்கிகளிடம் செலுத்தாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.