அரசு பள்ளியில் அடுத்தடுத்து நிகழும் குளறுபடி! மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு நேர்ந்த பரிதாபம்!

Photo of author

By Parthipan K

அரசு பள்ளியில் அடுத்தடுத்து நிகழும் குளறுபடி! மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு நேர்ந்த பரிதாபம்!

தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நடைமுறை படுதப்பட்டுள்ளது.டெல்லி ஷாதாராவில் உள்ள அரசுப் பள்ளி மற்றும்  தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.அனைத்து அரசு பள்ளியில் மதிய உணவு வழங்கபடுகிறது.அந்த வகையில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட ஒன்பது பள்ளி மாணவிகளுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.அந்த விசாரணையில் கிழக்கு டெல்லியின் ஷாதாரா மாவட்டத்தில் உள்ள டெல்லி அரசுப் பள்ளியில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 12 ஆம் தேதி மேற்கு வங்காளத்தின் பிர்பும் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் மதிய உணவோடு பாம்பு குட்டி ஒன்றை சேர்த்து சமைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.அந்த உணவை சாப்பிட்ட மாணவர்களின் உடல்நலம் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டதால் மாணவர்கள் அனைவரும் உடனடியாக ராம்பூர்ஹாட் மருத்துவக் கல்லுரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அவர்களுக்கு தற்போது உடல்நலம் சீரானதால் அவர்கள் வீடு திரும்பி உள்ளனர்.

 பள்ளியில் 53 மாணவர்களில் 20 பேர் மட்டுமே அந்த மதிய உணவை சாப்பிட்டார்கள் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது.மதிய உணவை சமைத்த பள்ளி ஊழியர் ஒருவர் பருப்பு இருந்த பாத்திரத்தில் பாம்பு உள்ளது என கூறியுள்ளார்.அதனால் தான் இந்த சம்பவம் அனைவரும் தெரியவந்தது.இல்லையெனில் ஒருவரும் இது பற்றி உண்மை தெரியாமல் இருந்திருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.