சர்க்கரை நோயை கட்டுப்படுத்த! துவர்ப்பு சுவையுடைய இந்த பழத்தை சாப்பிட்டால் போதும்!
சர்க்கரை அளவை கட்டுப்படுத்த எளிய வீட்டு குறிப்புகள்.தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயை பழங்கள் மூலமும் கட்டுப்படுத்த முடியும். துவர்ப்பு சுவையுடைய பழங்களால் சர்க்கரை நோயை வேகமாக குறைக்க முடியும். துவர்ப்பு சுவையுடைய பழங்களில் மிகவும் முக்கியமான பலமான நெல்லிக்காய் விளங்குகிறது.இந்த நெல்லிக்காய் ஜூஸ் ஆகவோ அல்லது துவையலாக செய்தும் சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடும் போது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
மேலும் கொய்யா இது அனைத்து வகையான நோய்களுக்கும் சிறந்த கனியாக பயன்படுகிறது. இந்த கொய்யாவை வைத்து கேன்சர் முதல் குணமாக்க முடியும். இந்த கொய்யாக்காவில் அதிக அளவு கனிம பொருட்களும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் இந்த கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு குறைகிறது. பேரிக்காய் இதில் உள்ள பைபர் அதாவது நார்ச்சத்து இந்த பேரிக்காயை தினமும் அதிக அளவு சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை பொதுவாகவே இருக்கும். இந்த பேரிக்காயை சாப்பிடும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனையும் குணமாகிறது. வேகவைத்த வேர்க்கடலை சர்க்கரை நோயாளிகள் அனைவருக்குமே கால் குத்தல், கால் மதமதப்பு,கால் எரிச்சல், கால் கூச்சம் போன்ற உணர்வுகள் இருக்கும். வேர்க்கடலையில் இருக்கக்கூடிய ரெஸ்பரேட்டால் என்ற கனிம பொருள் ரத்த குழாய்களில் உள்ள அடைப்பை சரி செய்து உங்களை வலுப்படுத்தி அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் அதிகமாக கீரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது முருங்கைக்கீரை பசலைக்கீரை சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.