சுகர் பிபி மின்னல் வேகத்தில் கண்ட்ரோல் ஆக.. இந்த ஒரு இலையை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Photo of author

By Divya

இக்காலகட்டத்தில் யாருக்கு என்ன நோய் பாதிப்பு வரும் என்று யூகிக்கமுடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருகின்றோம்.இதற்கு முக்கிய காரணம் நாம் பாலோ செய்து வரும் வாழ்க்கை முறை தான்.நவீன கால வாழ்க்கை முறை என்ற பெயரில் நம் ஆரோக்கியத்தை நாமே கெடுத்து வருகின்றோம்.

இதனால் சுகர்,பிபி,கேன்சர்,பிரஷர்,இதய நோய் போன்ற பல்வேறு பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடுகிறது.இந்த பாதிப்புகளில் இருந்து மீண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முள்ளங்கி கீரையில் கஷாயம் செய்து குடித்து வாருங்கள்.

முள்ளங்கி கீரை நன்மைகள்:-

*கால்சியம்
*பாஸ்பரஸ்
*நார்ச்சத்து
*வைட்டமின் ஏ,பி,சி

தேவையான பொருட்கள்:

1)முள்ளங்கி கீரை – கால் கைப்பிடி
2)சீரகம் – அரை தேக்கரண்டி
3)வெந்தயம் – கால் தேக்கரண்டி
4)கருஞ்சீரகம் – கால் தேக்கரண்டி
5)பூண்டு பல் – ஒன்று

செய்முறை விளக்கம்:

**முதலில் கால் கைப்பிடி முள்ளங்கி கீரையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.பிறகு இதை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

**அடுத்து வாணலியில் அரை தேக்கரண்டி சீரகம்,கால் தேக்கரண்டி வெந்தயம் மற்றும் கால் தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தனி தனியாக மிதமான தீயில் வறுத்துக் கொள்ளுங்கள்.

**பின்னர் ஒரு பல் வெள்ளை பூண்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

**அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு நறுக்கி வைத்துள்ள முள்ளங்கி கீரையை அதில் போட்டுக் கொள்ளுங்கள்.

**இதற்கு அடுத்து வறுத்த சீரகம்,வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

**இந்த பொடியை கொதிக்கும் முள்ளங்கி கீரை நீரில் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.அடுத்து நறுக்கி வைத்துள்ள வெள்ளைப்பூண்டு பற்களை அதில் போட்டு சுண்டக் காய்ச்சி அடுப்பை அணைத்து விடுங்கள்.

**பிறகு இந்த பாத்திரத்தின் மீது ஒரு தட்டு போட்டு மூடி 10 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள்.அதன் பிறகு ஒரு கிளாஸிற்கு இந்த பானத்தை வடிகட்டி பருகுங்கள்.தினமும் இந்த பானத்தை பருகி வந்தால் சுகர்,பிபி கட்டுப்படும்.

**உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த பானத்தை தொடர்ந்து பருகி வரலாம்.உடல் ஆரோக்கியம் மேம்பட இந்த முள்ளங்கி கீரை கஷாயத்தை தினமும் பருகி வாருங்கள்.முள்ளங்கி கீரையை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் மஞ்சள் காமாலை பாதிப்பு குணமாகும்.