நடிகர் விஜயை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய சோனு சூட்!! கெடு விதித்த ஹைகோர்ட்!!

Photo of author

By CineDesk

நடிகர் விஜயை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய சோனு சூட்!! கெடு விதித்த ஹைகோர்ட்!!

சோனு சூட், 1996 ஆம் ஆண்டு சோனாலி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இஷாந்த் மற்றும் அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர். 1999 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான கள்ளழகர் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து திரைத்துறையில் நடிகராக சோனு சூட் அறிமுகமாகியுள்ளார்.

அண்மையில் அடிக்கடி சோனு சூட் பற்றிய செய்தி ஏதாவது ஒரு நிலையில் வந்து கொண்டுள்ளது.  இரண்டு நாட்களுக்கு முன்பு சோனு சூட் படமொன்றில் அடிவாங்கும் காட்சியை பார்த்து சிறுவன் ஒருவன் தனது வீட்டு டிவியை உடைத்த செய்தி மலையாள செய்தி சேனலில் வைரல் ஆகி வந்தது.  இதைத் தொடர்ந்து அவரின் ரசிகர்கள் அவருக்கு பல செய்திகளை அனுப்பியிருந்தனர். தற்போது சோனு சூட் மும்பை உள்ள தனது 6 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை அனுமதி பெறாமல் ஹோட்டலாக மாற்றி உள்ளார்.

இதை தொடர்ந்து  மும்பை மாநகராட்சி  குற்றம் சாட்டி  அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இதை எதிர்த்து சோனு சூட் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்தார். ஆனால் இந்த வழக்கு தொடர்ந்து தள்ளுபடி ஆனது. இதனால் மும்பை ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தார். அந்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார். இந்த நிலையில் மும்பை மாநகராட்சி சோனு சூட் ஹோட்டலாக மாற்றிய 6 மாடி கட்டத்தை இரண்டு வாரத்திற்குள் அடுக்கு மாடி குடியிருப்பாக மாற்ற வேண்டும் என்று கெடு விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து மும்பை மாநகராட்சி மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.