தனுஷ் பாட்டினால் ஏற்பட்ட சர்ச்சை! பஸ் டிரைவரை தாக்கிய இளைஞர்கள்!

தனுஷ் பாட்டினால் ஏற்பட்ட சர்ச்சை! பஸ் டிரைவரை தாக்கிய இளைஞர்கள்!

நாகப்பட்டினத்தில் இருந்து ஆய்மலை கிராமத்திற்கு தனியார் மினி பேருந்து ஒன்று வழக்கமாக இயங்கும். நேற்று கோட்டை வாசல் படி கிராமத்தில் ஒரு இளைஞர் பேருந்தில் ஏறி உள்ளார். மேலும் அந்த பேருந்தில் சரத்குமார் நடித்த படத்தில் இடம்பெற்றுள்ள காதல் பாடல் ஒன்று பாடிக்கொண்டிருந்தது. அப்போது அந்த இளைஞர் இந்த காலத்தில் பழைய பாடல்களை போட்டு கொண்டிருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். தனுஷ் பாட்டு இருந்தால் போட வேண்டும் எனவும் தகராறு செய்துள்ளார்.  அதனை பொருட்படுத்தாமல் ஓட்டுநர் பேருந்தை இயக்கிக் கொண்டிருந்த நிலையில் அவரது அருகில் சென்ற இளைஞர் தனுஷ் நடித்த புதிய படத்தில் இடம் பெற்ற தாய்க்கிழவி பாடலை போட வேண்டும் எனவும் உரத்த  குரலில் கூறியுள்ளார்.

அதற்கு ஓட்டுனர் அந்த இளைஞர்க்கு  கிண்டலாக பதில் அளித்துள்ளார். அந்த பதிலினால் ஆத்திரமடைந்த இளைஞர் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார். மேலும் அவரது நண்பர்களை அழைத்து வந்து மீண்டும் அந்த பேருந்து வரும் வரை அந்த பேருந்து நிலையத்திலேயே காத்திருந்தார். பிறகு அந்த பேருந்து வந்தவுடன் வழிமறித்து சொன்ன பாடலை போட்டால் என்ன என தகராறில்  ஈடுபட்டனர்.

மேலும் ஓட்டுநரை இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனைக் கண்ட பயனாளிகள் அவரை தடுக்க முயற்சி செய்தபோது அந்த கும்பல் உள்ளூர் சாராய வியாபாரிகள் என்றும் தெரியவந்தது. அதனைக் கேட்ட தடுக்க  சென்றவர்களும் தயங்கி நின்றனர். மேலும் பலத்த காயமடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்தின சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தனுஷ் பாடல் கேட்டு ஓட்டுநரை தாக்கிய புகாரில் அகரஓரத்துறை சேர்ந்த அஜீத் என்ற இளைஞர்ரை  போலீசார் கைது செய்தனர் மேலும் தலைமறைவான அவரின் நண்பர்களை தேடி வருகின்றன.

Leave a Comment