இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஹேசில்வுட் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நாங்கள் எங்கள் வேலையை ஒழுங்காக செய்தோம் இனி பேட்ஸ் மேன் தான் என்று கூறியது சர்ச்சையாக வெடித்தது. மேலும் இந்த சர்ச்சையைத் தொடர்ந்து காவஸ்கர் இதுகுறித்து கருத்து தெரிவித்தது மேலும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
கவாஸ்கர் இதுகுறித்து கூறுகையில் அவர் ஹேசில்வுட்டின் அந்த பிளவு சர்ச்சைக்கு பின் அவர் உடனடியாக இரண்டாவது போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து அவர் தொடரிலிருந்து கூட நீக்கப்படலாம் மேலும் அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது ஆனால் அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரியவில்லை.
செய்தியாளர் சந்திப்பிலும் அவர் நன்றாக தான் இருந்தார் இது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இது போன்ற நிகழ்வுகள் இந்திய அணியில் நடக்கும் நிகழ்வு தான் ஆனால் ஆஸ்திரேலியாவில் இப்போதுதான் பார்க்கிறேன். என்று அவர் கூறியுள்ளார். இது தற்போது புது சர்ச்சையை கிளப்பி வருகிறது.