பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சர்ச்சை! ஹால் டிக்கெட்டில் மோடி மற்றும் விளையாட்டு வீரர்களின் புகைப்படம்! 

Photo of author

By Parthipan K

பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சர்ச்சை! ஹால் டிக்கெட்டில் மோடி மற்றும் விளையாட்டு வீரர்களின் புகைப்படம்! 

Parthipan K

controversy-in-the-university-photo-of-modi-and-sportspersons-on-hall-ticket

பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சர்ச்சை! ஹால் டிக்கெட்டில் மோடி மற்றும் விளையாட்டு வீரர்களின் புகைப்படம்!

பீகார் மாநிலம் தர்பங்காவில் எல்.என் பல்கலைக் கழகம் செயல்பட்டுவருகிறது.அந்த பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட மதுபானி ,சமஸ்திப்பூர் ,பெகுசராய் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் பிஏ பயிலும் மாணவர்களுக்கு தேர்வானது நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. அப்போது அவர்களுக்கென ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.

இந்நிலையில்  அந்த நுழைவு சீட்டில் மாணவர்களின் புகைப்படத்திற்கு பதிலாக பிரதமர் மோடி ,ஆளுநர் பாகு சவுகான் ,கிரிக்கெட் வீரர் தோனி ஆகியோரின் படங்கள் அச்சிடப்பட்டிருந்தது. அதனை கண்ட மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் முஸ்தாக் அகமது கூறியதாவது ஹால்டிக்கெட் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்படுகிறது. அதில் தான் முறைகேடு நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த சர்ச்சை குறித்து எப்ஐஆர்  பதிவு செய்யப்படும் ,இந்த விசாரணையின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.