ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் கொண்ட இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது அதில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடி உள்ளது. இந்த மூன்று போட்டிகளில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்றுள்ளது மற்றும் மூன்றாவது போட்டியானது சமணில் முடிவடைந்துள்ளது.
மூன்றாவது போட்டியானது பிரிச்போனில் உள்ள கபா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் களம் இறங்கி பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் அடித்து பெரிய இலக்கை நிர்ணயித்தது. தொடர்ந்து முதலெனில் கடமையை இந்திய அணி தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இந்நிலையில் கடைசி தருணத்தில் ஆகாஷ் டீப் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் இணைந்து இந்திய அணியை ஃபாலோ ஆனில் இருந்து தவிர்த்தனர். இந்த தருணத்தை ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து விராட் கோலி ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆக்ரோஷமாக கொண்டாடி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இதற்கு பல தரப்பில் இருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வந்தன.
இது குறித்து இந்திய அணியின் வர்ணனையாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், கோலி,கம்பீர் மற்றும் ரோகித் இவ்வாறு செய்தது நன்மையான ஒன்றுதான். இதுதான் போட்டியில் வெற்றிக்கு கொண்டு செல்லும். அதனால் அடுத்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். என்று அவர் கூறியுள்ளார்.