குக் வித் கோமாளி புகழால் சீல் வைத்த கடை! சோகத்தில் கடை உரிமையாளர்!

Photo of author

By Rupa

குக் வித் கோமாளி புகழால் சீல் வைத்த கடை! சோகத்தில் கடை உரிமையாளர்!

Rupa

Cook with clown fame sealed shop! Shop owner in tragedy!

குக் வித் கோமாளி புகழால் சீல் வைத்த கடை! சோகத்தில் கடை உரிமையாளர்!

கொரோனாவின் 2 வது அலை உருவாகி அதிக அளவு பரவி வருகிறது.மக்களின் நலனுக்காக அரசாங்காம் பல கட்டுப்பாடுகளை போட்டு வருகிறது.அந்தவகையில் கூட்டம் கூடும் பொது இடங்களில் 50சதவீதம் மட்டுமே அனுமதி.அதுமட்டுமின்றி முகக்கவசம் அணிவது,தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் விஜய் டிவியில் தற்சமயத்தில் அதிக அளவு பிரபலமடைந்த ஷோவான குக் வித் கோமாளி பிரபலம்,புகழ் நெல்லைக்கு வந்தார்.அவர் மொபைல் கடை திறப்பு விழாவிற்காக நெல்லை வந்துள்ளார்.இன்று காலை நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் சர்வீஸ் சென்டரை திறந்துவைக்க வருகை தந்தார்.அப்போது அவரை சந்திக்க வந்த ரசிகர்கள் சமூக இடைவெளி பின்பற்றாமல் மற்றும் முகக்கவசம் அணியாமலும் கூட்டம் கூடியதல் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

கூட்டம் கூடியதை தொடர்ந்து மாநகராட்சி சுகாதாரத்துறையினர் கடைய பார்வையிட்டனர்.கொரோனா விதிகளை மீறியதாக கூறி புகழ் திறந்து வைத்த கடைக்கு சீல் வைத்தனர்.தமிழக அரசு கூறிய கட்டுப்பாடுகளை மீறியதால் அக்கடைக்கு சீல் வைக்கப்பட்டதாக கூறுகின்றனர்.அதுமட்டுமின்றி புகழ் காரில் ஏறிய பிறகு அவர் காரை ரசிகர்கள் சூழ்ந்துக்கொண்டனர்.சூழ்ந்த ரசிகர்களை தடிகளைக் கொண்டு போலீசார் அகற்றினர்.கொரோனா 2வது அலை மிக விரைவாக பரவி வருவதை அனைவரும் உணர்ந்து பாதுக்காப்புடன் இருக்க தமிழக அரசு கூறும் நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.அதுமட்டுமின்றி நெல்லையில் ஓர் நாளில் மட்டும் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.