குக் வித் கோமாளி சீசன் 2 வின்னர் இவர் தான்!!

Photo of author

By CineDesk

குக் வித் கோமாளி சீசன் 2 வின்னர் இவர் தான்!!

CineDesk

Updated on:

Cook with Comali season 2 winner !

குக்கு வித் கோமாளி சீசன் 2 வின்னர் இவர் தான்!!

குக்கு வித் கோமாளி சீசன் 1  ’16 நவம்பர் 2019 முதல் 23 பிப்ரவரி 2020’ வரை வாரம்தொரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஒரு சமையல் நிகழ்ச்சி ஆகும். இதில் தொலைக்காட்சி பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த சமையல் நிகழ்ச்சியில் பிரபலங்கள் குக்காவும், அவர்களுக்கு உதவ விஜய் தொலைக்காட்சியின் நகைச்சுவை நடிகர்கள் கோமாளியாகவும் பங்கு கொண்டு சமைக்கும் எண்டர்டெயின்மெண்ட் ஷோவாக ஒளிபரப்பப்பட்டது.

கோமாளிகள் குக்குகளுக்கு உதவி செய்வது போல செம்ம ரகளை செய்து வந்தனர். இதை பார்கும் நேயர்களுக்கு புதுவித அனுபவத்தையும் குபீர் சிரிப்பையும் ஏற்படுத்தியது. இதை வாரம்தொரும் சனி மற்றும் ஞாயிட்ருக்கிழமை என 14 எபிசோட் ஆக ஒளிபரப்பானது.  அந்த நிகழ்ச்சி  23 பிப்ரவரி 2020  அன்று நிறைவு பெற்றது. அதில் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் குக்காக கலந்துக் கொண்டு முதலிடமும் நடிகை உமா ரியாஸ்கான் இரண்டாவது இடமும் பெற்றனர். இதை தொடர்ந்து குக்கு வித் கோமாளி சீசன் 2 விற்காக மக்களிடையே பல எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் குக்கு வித் கோமாளி சீசன் 2 ’14 நவம்பர் 2020′ அன்று ஒளிபரப்பானது.

சீசன் 1 ஐ விட சீசன் 2 விற்கு அதிகலவிளான வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடதக்கது. மேலும் இதில் பல சுவாரசியமான சுற்றுக்களும் பல புதிய  உறவுமுறைகளும் மலர்தது. தற்போது இதன் செமி பைனல்ஸ் ரவுண்ட் 21 மார்ச் அன்று நடைபெற்றது இதில் முதல் ஃபைனல்லிஸ்ட்டாக கனியும் இரண்டாவது ஃபைனல்லிஸ்ட்டாக அஸ்வின்னும் மூன்றாவது ஃபைனல்லிஸ்ட்டாக பாபா பாஸ்கரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அடுத்த வாரம் இதன் கிராண்ட் ஃபைனல்ஸ் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.