குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்குகிறது?! எப்போது தெரியுமா?!

0
146

கோலிவுட்டின் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. இதுவரை இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களில் நிறைவு செய்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டை ஓரங்கட்டியது குக் வித் கோமாளி தான்.

இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது வெறும் குக்குகளை மட்டும் வைத்து சமைக்காமல் கோமாளிகளையும் வைத்து சமைத்து, அதில் பல கேலிகளையும், கிண்டல்களையும் செய்து மக்கள் மனதை கவர்ந்து விட்டது.

இதில் உள்ள கோமாளிகளை மக்கள் மற்றும் ரசிகர்கள் வெறும் காமெடியனாக மட்டும் பார்க்காமல் தன்னுடைய குடும்பத்தில் ஒருவராக நினைத்து ஒவ்வொரு வாரமும் குக் வித் கோமாளி எப்பொழுது ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும், முதல் சீசன் இல்லாத அளவு இரண்டாவது சீசனில் இதற்கு வரவேற்பு அதிகமாக கிடைத்தது. இந்த நிலையில், 2-வது சீசன் முடிந்த காரணத்தால் ரசிகர்கள் மூன்றாவது சீசன் எப்போது தொடங்கும் என்று எதிர்பார்த்து வந்தனர்.

தற்போது இந்த நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வந்த வெங்கடேஷ் பட் கூறியுள்ளார். அதாவது வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் சீசன் 3 தொடங்கும் என்று அவர் அறிவித்தது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

இதே மாதத்தில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கு இடையே டிஆர்பி போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleமுதல்வரே நாளை மக்களிடம் நேரில் பெற்றுக் கொள்கிறார்!
Next articleடிரெடிஷனல் லுக்கில் கிறங்கடித்த சாக்ஷி அகர்வால்! படு ஹாட் புகைப்படம்!!