பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி சீசன் 1 , குக் வித் கோமாளி சீசன் 2 ஆகிய இரண்டு சீசன்களும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 விரைவில் ஆரம்பமாக உள்ளது.
குறிப்பாக, கடந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் தற்போது தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 விரைவில் ஆரம்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஆரம்பகட்ட பணிகளை விஜய் தொலைக்காட்சி தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த இரண்டு சீசன்கள் ஹிட்டானதை அடுத்து மூன்றாவது சீசன் அதைவிட ஹிட்டாக வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த முறை வித்தியாசமான முறையில் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், வரும் நவம்பர் மாதத்தில் குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்க உள்ளதாகவும், இந்த சீசனிலும் புகழ், பாலா, சரத், சிவாங்கி, மணிமேகலை உள்ளிட்ட ஒரு சிலர் கோமாளிகளாக தொடர்வார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.