Coop bazaar இருந்தால் போதும்!! இனி எல்லாம் வீடு தேடி வரும் புதிய அறிமுகம்!!
தமிழ்நாடு அரசு மக்களுக்கு வசதியாக இருக்க பல திட்டங்களை தற்போது செயல்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து தனி தனியாக ஒவ்வொரு துறையிலும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி தமிழகத்தின் கூட்டுறவுத்துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் சந்தை பொருட்களுக்கான புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய செயலியை இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து coop bazaar என்ற செயலி மூலம் ஆர்டர் செய்தால் போதும் வீட்டிற்கே நேரடியாக பொருட்கள் வழங்கப்படும். மேலும் இந்த செயலி மூலம் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் வீட்டில் இருந்தபடியே வாங்கி கொள்ள முடியும். இதில் எண்ணெய், பருப்பு வகைகள் , மாவு, மசாலா, அரிசி, பூஜைப்பொருட்கள், விவசாயத்திற்கு தேவையான உயிர் உரங்கள, பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய பொருட்கள் இதன் மூலம் வாங்கிக்கொள்ளலாம். இந்த செயலியை மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் பெரியகருப்பன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தற்பொழுது தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வருவதாக தெரிவித்தார். இந்த நிலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். விரைவில் தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.