இன்று மாலை ரிலீஸ் ஜெயிலர் படத்தின் முதல் “காவாலா” சிங்கிள்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

0
45
Release Jailer's first single “Kawala” this evening!! Fans in excitement!!
Release Jailer's first single “Kawala” this evening!! Fans in excitement!!

இன்று மாலை ரிலீஸ் ஜெயிலர் படத்தின் முதல் “காவாலா” சிங்கிள்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் ரஜினிகாந்த். இவர் ரசிகர்களால் சுப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்படுவார். தான் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே இன்று முதல் அவர் ஹீரோவாகவே தனது நடிப்பை தொடருகிறார்.

இன்று அவருக்கு போட்டியாக எத்தனை இளம் ஹீரோக்கள் வந்தாலும்  அவர் தனது நடிப்பு திறமையால் எப்பொழுதும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவே திகழ்கிறார்.

இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் அண்ணாத்த இந்த படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் ரஜினியின் நடிப்பிற்க்காகவே பலராலும் பார்க்கப்பட்டது. இதன்பின்பு ரஜினி கோலமாவு கோகிலா,பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கம் ஜெயிலர் படத்தில்  நடித்து வருகின்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடக்கும் பட்சத்தில் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு கூறியுள்ளது.

மேலும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் ,தமன்னா ,யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இணைத்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக ஜூலை மாதம் நடத்த இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் பாடலான “காவாலா”  என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் அவர்களின் 170 படத்தை  டி.ஜே. ஞானவேல் இயக்க உள்ளார்.மேலும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

author avatar
Parthipan K