தெருவே கமகமக்கும் கொத்தமல்லி சாதம் – சுவையாக செய்வது எப்படி?
நம் சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் கொத்தமல்லி இலையில் விட்டமின் ஏ,சி மற்றும் இரும்புச் சத்துக்கள் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும்,நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகளவில் வழங்குகிறது.இந்த கொத்தமல்லி இலையை வைத்து சுவையான கொத்தமல்லி சாதம் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
*கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி
*இஞ்சி – சிறு துண்டு
*பூண்டு – 5 பற்கள்
*பட்டை – சிறு துண்டு
*இலவங்கம் – 2
*பெருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி
*தேங்காய் – 1 கப்(துருவியது)
*பச்சை மிளகாய் – 2
*எண்ணெய் – 2 தேக்கரண்டி
*கடுகு – 1/2 தேக்கரண்டி
*உளுந்து – 1/2 தேக்கரண்டி
*கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
*வர மிளகாய் – 2
*பெரிய வெங்காயம் – 1
*பெருங்காயம் – 1 சிட்டிகை
*உப்பு – தேவையான அளவு
*மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
*வடித்த சாதம் – 2 கப்
செய்முறை:-
முதலில் ஒரு மிக்ஸி ஜார் ஒன்றை எடுத்து கொள்ளவும்.அதில் 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி தழை,சிறு துண்டு இஞ்சி,5 பற்கள் பூண்டு,சிறு துண்டு பட்டை,2 இலவங்கம்,1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம்,1 கப் துருவிய தேங்காய்,பச்சை மிளகாய் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து மைய்ய அரைக்கவும்.
பின்னர் அடுப்பில் கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் 1/2 தேக்கரண்டி கடுகு,1/2 தேக்கரண்டி உளுந்து,1 தேக்கரண்டி கடலை பருப்பு,2 வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.அடுத்து நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி விழுது,மஞ்சள் 1 சிட்டிகை,தேவையான அளவு உப்பு,பெருங்காயத்தூள் 1 சிட்டிகை அளவு சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கவும். பின்னர் வடித்த சாதம் 2 கப் அளவு எடுத்து அதில் சேர்த்து நன்கு கிளறவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.மல்லி சாதம் இந்த முறையில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.