கொரோனா தொற்றி மருத்துவமனையில் இருந்து சேட்டை செய்த விசித்திர பெண் : அதனை பார்த்த 3பேருக்கு நேர்ந்த விபரீதம்!

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் கொத்து கொத்தாக பல உயிர்களை கொன்று வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி நாட்டு மக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என்று ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதித்து தமிழக அரசு கண்காணித்து வருகிறது. மேலும் நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரப் பணியாளர்களை முடுக்கி விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அரியலூரை சேர்ந்த பூஜா என்ற பெண் கொரோறா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு அரசின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வந்தாலும் டிக் டாக்கில் வீடியோ போட்டு சோக கீதம் பாடி வந்துள்ளார்.

இவர் டிக்டாக்கில் வீடியோ போட்டதோடு நிறுத்தாமல் அங்கிருந்த சுகாதாரப் பணியாளர்களை அழைத்து அந்த வீடியோக்களை காட்டி தனக்கு வரும் லைக்குகளை காட்டி பெருமையாக பேசியுள்ளார். இந்தப் பெண் வீடியோ போட்டதால் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் பணியில் இருந்த 3 சுகாதார ஊழியர்களை தனிமைப்படுத்தி அரசு மருத்துவமனை கண்காணித்து வருகிறது.

இதனை பார்த்த மருத்துவ நிபுணர்கள் பூஜா தனிமையில் இருப்பதால் டிக்டாக் நோயை வென்று வர உற்சாகத்தை கொடுக்கும் என்று கருதுகின்றனர். ஆனால் பூஜாவின் போனை வாங்கி வீடியோக்களை பார்த்ததை தவிர வேறு எந்த தவறும் செய்யாத சுகாதார ஊழியர்களின் நிலை தான் பரிதாபமாக உள்ளது.