கொரோனா பீதி கடலூர் மாவட்டத்தையும் விட்டுவைக்கவில்லை : அடுத்தடுத்து நடவடிக்கை!

0
211

உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது. இதனால் தமிழக அரசு மற்றும் சுகாதார துறையும் இனைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது.

இதனை அடுத்து பெருநகரங்களில் பொது மக்கள் அதிகம் கூடும் வணிகவளாகம், பூங்கா, தியேட்டர் உள்ளிட்ட இடங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று அபாயம் இன்னும் குறையவில்லை என்பதால் மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இதனால் கடலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கையாக கடலூர் மற்றும் சிதம்பரம் நகரங்களில் பெரு வணிக வளாகங்களான கே.வி டெக்ஸ், பக்ஷீ, சுமங்கலி, நூதனம், கஸ்தூரி பாய், மிலன், சங்கம், மெட்ரோ, அனைத்து திரையரங்குகள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், உடற்பயிற்சி கூடம் மற்றும் அனைத்து பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 20/03/2020 முதல் 31/03/2020 வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Previous articleவல்லரசுகளை ஒடுக்கும் கொரோனா : வெளியான ஷாக் ரிப்போர்ட், அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா!
Next article10 அல்லது அதற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்யும் வணிகவளாகங்களை மூடுங்கள் : மாவட்ட ஆட்சியர் அதிரடி!