இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா கோவிட் என்று பெயர் சூட்டிய பெண்மணி! வைரலாகும் குழந்தையின் படங்கள்!

Photo of author

By Jayachandiran

இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா கோவிட் என்று பெயர் சூட்டிய பெண்மணி! வைரலாகும் குழந்தையின் படங்கள்!

Jayachandiran

இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா கோவிட் என்று பெயர் சூட்டிய பெண்மணி! வைரலாகும் குழந்தையின் படங்கள்!

இந்தியாவில் கொரோனாவின் தாண்டவம் அதிகரித்து வரும் நிலையில் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு “கொரோனா’ “கோவிட்’ என்று பெயர் வைத்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

உலகநாடுகளைதொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகத்தின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றால்
10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சீனா வூகான் பகுதியில் உருவான கொரோனா தாக்குதல் 199 நாடுகளில் தீவிரமாக பரவி உயிர்பலியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இத்தாலி, பிரான்சு, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 12 ஆயிரம் பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் கடந்துள்ளது.

கொரோனாவால் ஸ்பெயினில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது. இதேபோன்று அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் அங்கு கொரோனோ பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்தை கடந்துள்ளது. உலகளவில் அதிகம் கொரோனா அதிகம் பாதித்த பட்டியலில் அமெரிக்கா இருந்து வருகிறது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், மேலும் இரண்டு வாரங்களுக்கு கொரோனாவின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அதில் ஒரு குழந்தை ஆண் மற்றொரு குழந்தை பெண் குழந்தையாகும். இந்த குழந்தைகளுக்கு “கொரோனா’ மற்றும் ” கோவிட்’ என்றும் பெயர் வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பெண் கூறுகையில், கடந்த மார்ச் 27 ஆம் தேதி எனக்கு பிரசவம் ஏற்பட்டது.
ஊரடங்கு உத்தரவு மற்றும் பல்வேறு சிக்கல்களுக்கு இடையே அதிக பிரசவ வலியில் இவர்களை நான் பெற்றெடுத்தேன். இதனை எப்போதும் மறந்துவிடக்கூடாது என்பதற்காக இவ்வாறு பெயர் வைத்தோம் என்று கூறியுள்ளார். இதனால் பிறந்ததுமே உலகளவில் இரண்டு குழந்தைகளும் பிரபலமாகி உள்ளனர். இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.