கொரோனா கட்டுப்பாடு ஆலோசனைக்கூட்டம்! புது கட்டுப்பாடுகளை விதித்தார முதல்வர்!
கொரோனா தொற்றானது கடந்த இரண்டரை ஆண்டுகளாக மக்களை தொடர்ந்து பாதித்த வண்ணமாகவே உள்ளது. தற்பொழுது தான் மூன்றாவது அலை முடிவுக்கு வந்து மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தொடங்க ஆரம்பித்தனர். இச்சமயத்தில் இரண்டரை ஆண்டுகளாக ஏற்றுமதி-இறக்குமதி வணிகம் சரியான முறையில் இயங்காததால் அனைத்து நாடுகளும் பொருளாதார வீழ்ச்சி அடைந்திருந்தது. இதனால் ஒவ்வொரு நாட்டிற்கும் கடன் சுமை அதிகரித்தது ஆகவே காணப்படுகிறது. குறிப்பாக இலங்கை மிகவும் பின்நோக்கி பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்பொழுது தான் அந்த நிலை எல்லாம் கடந்து மக்கள் முன்னேற ஆரம்பித்துள்ளனர். மூன்றாவது அலை பெருமளவு பாதிப்பை தராவிட்டாலும், தற்பொழுது 4வது அலை தீவிரமாக பரவி வருகிறது.
அதனை கட்டுப்படுத்த தற்போது மாநிலங்கள் தோறும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் பிரதமர் மோடி அவர்கள் அனைத்து முதல்வர் களையும் கண்டு காணொளி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கொரோனா தொற்று கட்டுப்படுத்துவது குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் ஸ்டாலின் அவர்கள் கூறியது, தற்போது வரை நாற்பத்தி ஆறு சதவீதத்திற்கும் மேல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொல்ல தகுதியானவர்கள் விரைவில் செலுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதனால் இனி இரண்டாம் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்பதை அதிகாரிகள் கவனிக்க வேண்டும். அதே போல் இனி பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவது முகக் கவசம் அணியாமல் இருப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். வடமாநிலங்களில் தொற்று பரவலானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இங்கு அந்நிலை வருவதற்கு முன் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். மேலும் அந்தந்த மாவட்டத்திற்கு ஏற்ப மாவட்ட ஆட்சியர்கள் கட்டுப்பாட்டை அமைத்துக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியது குறிப்பிடத்தக்கது.