இந்தியாவில் கொரோனாவுக்கு பலியான வாலிபர்! உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு

0
117
Corona Infections Rate in Tamilnadu
Corona Infections Rate in Tamilnadu

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியான வாலிபர்! உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா என்ற கொடிய வைரஸ் தற்போது உலகிலுள்ள பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 13 ஆயிரத்திற்கு மேல் இந்த கொடிய வைரசால் இறந்துள்ளனர். 3 லட்சத்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 346 பேருக்கு வைரஸ் தாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தற்போது கத்தார் நாட்டில் இருந்து வீடு திரும்பிய 38 வயது உடைய வாலிபர் வைரஸ் பாதிப்பு காரணமாக பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று இருந்தார். மருத்துவர்களின் கண்காணிப்பு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அந்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை இந்தியாவில் 6 ஆக உயர்ந்துள்ளது.

Previous articleவிஜய்யை திருமணம் செய்ய ஆசை! பிரபல நடிகை பேட்டி
Next articleதமிழகத்தின் மூன்று மாவட்டங்கள் முடக்கப்படும் : மத்திய அரசு அதிரடி உத்தரவு!