கொரோனா கொல்லவில்லை! பசிக்கொடுமை குழந்தையை கொன்றுவிட்டது!

Photo of author

By Kowsalya

கொரோனா கொல்லவில்லை! பசிக்கொடுமை குழந்தையை கொன்றுவிட்டது!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ராவில் பசியால் ஒரு சிறிய குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொரோனா தான் கொள்வது மட்டும் இல்லாமல் பல்வேறு வகைகளிலும் அனைவரையும் கொன்று வருகிறது. அனைவரும் வேலையில்லா திண்டாட்டம், பசிக்கொடுமை என மன அழுத்தத்திற்கு ஆளாகி உயிரிழந்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள நாக்ல விதிசந்த் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பப்பு சிங். இவரது மனைவி ஷீலா தேவி. அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். அவர்களில் ஒருவர்தான் இந்த சோனியா. அந்த குடும்பம் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து அனைவரும் பசியால் வாடி வந்துள்ளனர்.

அதற்கு சிறிய குழந்தையான சோனியா இரையாகியுள்ளார். பசிக்கொடுமையால் சோனியா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஆக்ரா மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய முன் வந்திருக்கிறது.அந்த குழந்தையின் குடும்பத்திற்கு உடனடியாக 50 கிலோ கோதுமை, 40 கிலோ அரிசி, 5 லிட்டர் சமையல் எண்ணெய் மற்றும் காய்கறி பழங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன.

சோனியாவின் குடும்பத்திற்கு ரேஷன் கார்டு வழங்கி, வங்கிக் கணக்கு தொடங்கி, உஜ்வாலா கேஸ் இணைப்பு ஏற்படுத்தி, டிபி நோயாளியான தந்தைக்கு படுக்கை வசதி செய்து கொடுத்து, இரண்டு பிள்ளைகளின் கல்விக்கான உதவி என அனைத்தையும் செய்து தந்துள்ளது. மேலும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், வீடு கட்டித் தரவும் மாநில அரசு முன்வந்துள்ளது.

மேலும் உயிரிழந்த சோனியாவின் தந்தை மிகவும் நோய்வாய்பட்டுள்ளதால் சீலாதேவி ஊரக வேலைத் திட்டத்திற்கு சென்று வந்துள்ளார். அதனால் அந்த குடும்பத்திற்கு மின்சாரம் வழங்கியும் மேலும் அவர் கட்டாமல் இருந்த ரூ.7732 மின்சார தொகையும் சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் செலுத்த நடவடிக்கை செய்துள்ளது.

மேலும் அந்த குடும்பத்தில் யாராவது மன அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளார்களா என அனைவரையும் மருத்துவ பரிசோதனை செய்து உள்ளது.

இதைப் பற்றி தகவல் அறிந்த மனித உரிமை ஆணையம் உத்தரபிரதேச மாநில அரசுக்கு நோட்டீஸ்  அனுப்பியுள்ளது. கொரோனா காலத்தில் மக்களின் நிலைமை அறிந்து செயல்படுவதே அரசின் கடமை. அதை தவறிய உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு மனித உரிமை ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.