தமிழகத்தில் 70க்கு கீழ் சரிந்த நோய்த் தொற்று பாதிப்பு!

Photo of author

By Sakthi

இந்தியாவில் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் நோய்தொற்று ஊடுருவியது.பின்பு மெல்ல, மெல்ல, அந்த நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது.அதன் பின்னர் அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதில் இந்த நோய் தொற்றுக்கு எதிராக மிகப்பெரிய ஆயுதமாக திகழ்வது தடுப்பூசி அந்த தடுப்பூசியை நாடு முழுவதும் மிக விரைவாக செலுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுத்தியது.

ஆனால் இந்த தடுப்பூசி செலுத்துவதில் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தது தமிழகம் தான்.அதன் காரணமாகவே தற்சமயம் தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் மெல்ல, மெல்ல, குறைந்து நோய்த்தொற்று பரவல் தன்னுடைய முடிவை நெருங்கிவிட்டது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்றைய நோய்த்தொற்று பரவல் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 38,458 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 29 ஆண்களுக்கும், 32 பெண்களுக்கும், உட்பட ஒட்டு மொத்தமாக 61 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 19 பேரும் செங்கல்பட்டில் 9 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் குறைந்தபட்சமாக கோயமுத்தூர், திருவள்ளூர், உட்பட 17 மாவட்டங்களில் 5க்கும் குறைவான நபர்கள் மட்டுமே இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் 12 வயதிற்குட்பட்ட 18 குழந்தைகளுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 8 பேருக்கும், நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதோடு அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராணிபேட்டை, சேலம், தென்காசி, திருப்பத்தூர், திருவாரூர், திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரம், தர்மபுரி, கள்ளகுறிச்சி, கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, உள்ளிட்ட 19 மாவட்டங்களில் ஒருவருக்குக்கூட நோய் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் இதுவரையில் 6,40,18,735 பேருக்கு நோய் பெற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 34,52,276 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரத்தின் அடிப்படையில் 170 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 80 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட ப்டுக்கைகளிலும், 20 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் நேற்று எந்த ஒரு மாவட்டத்திற்கு வரும் நோய் தொற்று நோய் பரவல் காரணமாக, ஒருவர்கூட பலியாகவில்லை தமிழ்நாட்டில் இதுவரையில் 38,025 பெயர் நோய் தொற்று காரணமாக, பலியாகி இருக்கிறார்கள்.

இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து நேற்று 127 பேர் விடுபட்டிருக்கிறார்கள்.. அதோடு 730 சிகிச்சையிலிருக்கிறார்கள் என்றும் இந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.