ரஷ்யா உக்ரைன் போருக்கிடையே பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார் ரஷ்ய அதிபர் புடின்!

0
82

ரஷ்யா உக்ரைன் மீது கடந்த 24ஆம் தேதி திடீரென்று போர் தொடுத்தது இதற்கு காரணம் உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்ததால் தான் என்று தெரிவிக்கப்படுகிறது.கடந்த 24 நாட்களை தாண்டி போர் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.

உக்ரைன் அதிகாரம் செலுத்திவந்த கிரிமியாவை போர் மூலமாக ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதன் 8வது வருட நிறைவை குறிக்கும் விதத்தில் இந்த பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.பொதுக்கூட்டம் நடந்த மைதானம் மற்றும் அதனை சுற்றிலும் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருந்ததாக மாஸ்கோ காவல் துறையினர் தெரிவித்தார்கள்.

உக்ரைன் மீது போர் தொடுத்திருப்பதால் பல்வேறு நாடுகளின் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த சூழ்நிலையில், இந்த போருக்கு ரஷ்ய மக்கள் ஆதரவு அளித்திருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.

அரசு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் இதில் கட்டாயமாக பங்கேற்று கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டார்கள்.

இந்த கூட்டத்தில் பங்கேற்று கொண்டு உரையாற்றிய ரஷ்ய அதிபர் உக்ரைன் போரில் பங்கேற்றுள்ள ரஷ்ய ராணுவ வீரர்களை வெகுவாகப் பாராட்டினார். உக்ரைனிலுள்ள தன்னுடைய எதிரிகள் நவ நாஜிக்கள் என்று அவர் குற்றம் சுமத்தினார்.

அதோடு இனப்படுகொலையை தடுப்பதற்காக உக்ரைன் மீது போர் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார் ரஷ்ய தேசபக்தி பாடல்கள் இடம்பெற்ற கலைநிகழ்ச்சியும் பொதுக்கூட்ட மேடையில் நடந்தது.