உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்த நவீனின் உடலை தானம் அளிக்க முடிவு செய்த பெற்றோர்!

0
66

தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா கடந்த 24ஆம் தேதி திடீரென்று அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது.இந்த நிலையில் தொடர்ந்து 24வது நாளாக இன்றைய தினமும் போர் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், அங்கே சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் கடந்த மாதம் 27ம் தேதி முதல் மத்திய அரசு முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதுவரையில் 20,500 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.தொடர்ந்து அங்கே இருக்கக்கூடிய இந்தியர்கள் மீட்கப்பட்டு வந்தார்கள் உக்ரைன் வான் எல்லைகள் மூடப்பட்டிருந்ததால் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி அங்கிருந்து இந்தியர்களை மீட்டு வந்தது மத்திய அரசு.

இந்த நிலையில், கடந்த 1ம் தேதி ரஷ்யப் படையினர் நடத்திய தாக்குதலில் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சாலகேரியை சாரிங்க நவீன் என்ற மருத்துவ மாணவர் பலியானார்.இதற்கு இந்திய தரப்பில் கடுமையான கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டது. அதோடு இந்தியாவில் இருக்கின்ற உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

முன்னதாக மாணவர் உயிரிழந்த செய்தியை அறிந்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள், உள்ளிட்டோர் மாணவரின் பெற்றோரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார்கள். அப்போது மாணவரின் உடலை மீட்டு தாயகம் கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்து மாணவரின் பெற்றோர் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்கள்.

பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி உக்ரைனில் பலியான உடலை மீட்க தேவைப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த சூழ்நிலையில் மாணவர்களின் உடல் வருகின்ற திங்கள்கிழமை அதிகாலையில் விமான நிலையத்திற்கு வந்து சேரும் என்று அந்த மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார்.

இறுதி சடங்குகளுக்காக மகனின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த நபியின் தந்தை சங்கரப்பா பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கின்ற பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, உக்ரைனில் குண்டு வீச்சில் பலியான நவீனின் உடல் வருகின்ற 21ம் தேதி அதிகாலை 3 மணியளவில் பெங்களூருவுக்கு வந்து சேரும் அதன்பிறகு பொதுமக்கள் பார்வைக்கு உடல் வைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

நவீனின் உடலை மருத்துவம் படிப்பதற்கு மாணவ, மாணவிகளுக்காக தேவ நகரிலிருக்கின்ற எஸ்.எஸ். மருத்துவமனைக்கு தானமளிக்க நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

21 வயதுடைய நவீன் உக்ரைனின் கார்கிவ் நகரிலிருக்கின்ற தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்துவந்த மாணவர் ஆவார். இந்திய மருத்துவ மாணவரான அவருடைய மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ரஷ்யா தெரிவித்திருக்கிறது.