அதிர்ச்சி இந்திய கிரிக்கெட் வீரர்கள் 8 பேருக்கு நோய் தொற்று! மேற்கிந்தியத் தீவுகளுடனான தொடர் நடைபெறுமா?

Photo of author

By Sakthi

நோய்த்தொற்று தற்போது உலகம் முழுவதும் தன்னுடைய உருமாறும் தன்மையை மாற்றிக் கொண்டே மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி வருகிறது. முதல் அலை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை இருந்தாலும் 2வது அலையில் நோய் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பெரிய அளவிலிருந்தது.

இதனையடுத்து நோய்த் தொற்று தொடர்ந்து உருமாற்றம் அடைந்து 3வது மற்றும் 4வது அலைகளென்று வேகமாக பரவி வருகிறது. விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்கள், திரைப் பிரபலங்கள், உள்ளிட்ட பலருக்கும் நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது.

இப்படியான சூழலில், தற்சமயம் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியில் 8 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஷிகர் தவான் ,ருதுராஜ், நவ்தீப் சைனி, ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்டோருக்கு தற்சமயம் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அத்தோடு மட்டுமல்லாமல் அணி நிர்வாகத்தை சார்ந்தவர்களுக்கும் நோய் தொற்று பாதிப்பு உண்டாக்கியிருக்கிறது மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் இந்திய அணி உள்ளிட்ட அணிகளுக்கு இடையிலான தொடர் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி ஆரம்பிக்கயிருக்கின்ற சூழ்நிலையில், இந்திய அணியின் வீரர்களுக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருப்பதால் தொடர் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.