கொரோனாவுக்கு எதிரான யுத்தம்: நிவாரண நிதியை அள்ளி வீசும் திரை நட்சத்திரங்கள்! 4 கோடி தரும் பாகுபலி நடிகர்..!!
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அரசியல் கட்சி மற்றும் திரை நட்சத்திரங்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண நிதி கொடுக்கப்பட்டு வருகிறது. பாகுபலி படத்தின் நடிகர் பிரபாஸ் 4 தருவதாக கூறியுள்ளார்.
உலகளவில் 24,000 பேர் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. சீனாவின் வூகானில் உருவான இந்த வைரஸ் தற்போது உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கு பரவி அதிக உயிர்பலியை உண்டாக்குவதோடு தினமும் மக்களிடையே தொற்று அதிகரித்து வருகிறுது. இதன் விளைவாக இந்தியாவில் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்த ஆபத்தான சூழ்நிலையில் கொரோனா பாதிப்பினை எதிர்கொள்ள சினிமா திரைப்பட பிரபலங்கள் பலர் ஆதரவுக்கரம் நீட்டியது அரசு மற்றும் மக்களிடையே ஓரளவு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான பிரபாஸ், கொரோனா நிவாரண நிதியாக 4 கோடி ரூபாயை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கான முதல்வர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா 50 லட்சமும், மீதமுள்ள 3 கோடி ரூபாயை இந்திய பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இவரைப்போலவே நடிகர் பவண்கல்யாண் 2 கோடியும், ராம்சரண் 70 லட்சமும், சிரஞ்சீவி 1 கோடியும், மகேஷ்பாபு 1 கோடியும் பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த நிவாரண நிதிகளின் மூலம் மருத்துவ சிகிச்சை உபகரணங்கள், புதிய நோயாளிகளுக்கான படுக்கை மற்றும் பிற ஏற்பாடுகள் செய்ய உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.