இந்தியாவில் மீண்டும் 125 பேருக்கு கொரோனா!  மத்திய சுகாதாரத்துறை  அமைச்சகம் வெளியிட்ட தகவல்!

0
203

இந்தியாவில் மீண்டும் 125 பேருக்கு கொரோனா!  மத்திய சுகாதாரத்துறை  அமைச்சகம் வெளியிட்ட தகவல்! 

இந்தியாவில் மேலும் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸின் துணை வைரஸான ஒமிக்ரான் பாதிப்பால் சீனா கடுமையான ஆட்டம் கண்டது. அங்கு நிலமை கை மீறி போய்விட்டதாகவும் தினமும் 10 லட்சத்துக்கு அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. மேலும் தினமும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிர்  இழப்பதாகவும் தகவல் வெளியானது.சீனாவின் பாதிப்பை அறிந்த மற்ற நாடுகள் தங்கள் நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கின.

இதேபோல் இந்தியாவிலும் ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கும் யூனியன் அரசுகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாட்டை பலப்படுத்தும் படி கடிதம் மூலம் வலியுறுத்தியது. இதன்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் நாடு முழுவதிலும் பலப்படுத்தப்பட்டு பரவல் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 125 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும்  நாடு முழுவதிலும் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1896 ஆக பதிவில் உள்ளது.

நாடு முழுவதிலும் இதுவரை கொரோனா நோயினால் 5, 30, 739 பேர் இறந்துள்ளனர். 4, 41,49,802 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 220, 36,02,459 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 34, 835 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் நாடு முழுவதிலும் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தனது செய்தி குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளது.

Previous articleகல்லூரி மாணவர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இனி சனிக்கிழமை விடுமுறை கிடையாது!
Next articleமத்திய அரசு ஊழியர்களின் கவனத்திற்கு! உயர் நீதிமன்றம் வெளியிட்ட மாஸ் அப்டேட்!