இந்திய கிரிக்கெட் கேப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Photo of author

By Rupa

இந்திய கிரிக்கெட் கேப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கொரோனா தொற்றானது ஓராண்டு கலத்தைக் கடந்து தற்போது இந்த வருடமும் 2 வது, 3 வது அலையாக கொரோனா தொற்று கோரதாண்டவம் எடுத்து ஆடுகிறது.இதனால் உலக நாடுகள் அனைத்தும் பீதியடைந்துள்ளது.தடுப்பூசிகள் கண்டுபிடிக்கபட்டு போட்டு வந்தாலும் இந்த தொற்று ஒரு பக்கம் மின்னல் வேகத்தில் பரவிக்கொண்டு தான் வருகிறது.அந்தவகையில் பல அரசியல் தலைவர்கள்,நடிகர்கள் என அனைவருக்கும் தொற்று பரவி உள்ளது.

அதனைத்தொடர்ந்து நமது கிரிக்கெட் சூப்பர்ஸ்டார் சச்சினுக்கு கொரோனா தொற்று உறுதியானது.அப்போது அவர் டிவிட்டர் பக்கத்தில் கூறியது, சச்சின் டெண்டுல்கர் தன்னை வீட்டினுள்ளே தனிமை படுத்திக் கொண்டதாகவும்,அவர் குடும்ப உறுப்பினர்கள் கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில் யாருக்கும் தொற்றானது பரவவில்லை தனுக்கு மட்டும் தான் கொரோனா தொற்று இருப்பதாகவும் கூறினார்.

https://www.instagram.com/tv/CMJcanKgzrP/?utm_source=ig_web_copy_link

அதனையடுத்து இந்திய மகளிர் அணியின் டி20 கேப்டன் ஹர்மன்ப்ரீத் என்பவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.தற்போது கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு தொடர்ந்து தொற்று வரவி வருகிறது.இது அவர்களின் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை தந்துள்ளது.இந்திய மகளிர் அணியின் கேப்டன் அர்ஜுனா விருதை பெற்றவர் என்பது குறிப்பிட தக்கது.அதுமட்டுமின்றி நியூசிலாந்து ஆட்டத்தில்,WT20 களில் இந்தியா ஒரு சதம் அடித்த பெண்மணி என்ற பெருமையை பெற்றவர்.அப்போது அவர் 51 பந்துகளுக்கு 103 ரன்களை எடுத்தார்.இந்த ரன்களை இன்றளவும் யாரும் முறியடிக்கவில்லை.இவருக்கு தற்போது தொற்று பரவியது அவரின் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.