நியூயார்க்:
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 305 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல்.கடந்த 11 நாட்களாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பிற்கு பலியானவர்களின் எண்ணிக்கையானது 1000 க்கு கீழே உள்ளது. இதனால் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக கருதப்படுகிறது.
உலக நாடுகளில் கொரோனா தொற்றால் இன்று வரை 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.90 லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் மேலும் 48 லட்சத்து 41 ஆயிரம் பேர் இந்நோய் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர்.
உலக நாடுகளில் அமெரிக்கா இன்று கொரோனா பாதிப்பில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.இதுவரை அமெரிக்காவில் இந்த நோயால் 119,959 பேர் உயிரிழந்தனர்.
கொரோனா பாதிப்பு முதன் முதலில் சீனா என்றாலும் இந்த வைரசால் அதிகம் பாதிக்கபட்ட நாடாக அமெரிக்கா கருதப்படுகிறது.தொடர்ந்து 11 ஆவது நாளாக 1000 பேர் இந்த நாட்டில் உயிரிழந்துள்ளனர்.22 லட்சத்து 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நோய் தொற்றுக்கு உள்ளாகின.
இத்தாலி,ஸ்பெயின்,பிரான்ஸ்,பிரிட்டன், ஈரான்,பெய்ஜியம் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளும் அதிக அளவில் இந்த நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் எணணிக்கை தொடர்ந்து அதிக அளவிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.