சொன்னா கேளுங்க! மக்களிடம் கைகூப்பி கோரிக்கை வைத்த முதல்வர்!

Photo of author

By Sakthi

நாடு முழுவதும் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய மாநில அரசுகள் அதனை கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இருந்தாலும் தொற்றின் தாக்கம் குறைந்தபாடில்லை.

மத்திய மாநில அரசுகள் பொது மக்களுக்கு முக கவசம் அணிய வேண்டும் என்ற கட்டாய உத்தரவை பிறப்பித்து இருந்தாலும் அதனை பொதுமக்கள் சற்றும் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அதன் காரணமாகவே இந்த நோய் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு வட மாநிலங்களில் இந்த நோய் தொற்றினால் உயிரிழந்தவர்களை குவியல் குவியலாக எரியூட்டும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் இந்த நோய்த்தொற்றின் நிலைமை கை மீறி சென்று விட்டது என்று அந்த மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்திருக்கிறார். கடந்த 18ஆம் தேதி இரண்டாவது முறையாக இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு அவர் மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். இந்நிலையில் இன்று குணமடைந்து வீடு திரும்பிய அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில் அவர் தெரிவித்ததாவது, கர்நாடக மாநிலத்தில் நோய்த்தடுப்பு பரவல் மிக மோசமாக இருக்கிறது இந்த நிலைமை கை மீறி போய்விட்டது நான் பொதுமக்களை கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன் தேவை என்று யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார்.

மாநிலத்தில் அனைத்து வீட்டிலும் மூன்று அல்லது நான்கு பேர் வரையில் இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள். தற்போது இதற்கு ஒரே தீர்வு முக கவசம் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்துவதுதான் என்று தெரிவித்த அவர், சமூக இடைவெளியை தீவிரமாக பின்பற்றுங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.a இதை தவிர வேறு வழி இல்லை என்றும் எடியூரப்பா தெரிவித்திருக்கிறார்.