தமிழக அரசின் முக்கிய கோரிக்கையை கேட்டு அதிர்ந்து போன பிரதமர் நரேந்திர மோடி!

0
66

நோய்த் தொற்று அதிகமாக பரவிவரும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உடன் இன்று காலை 10 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ஆலோசனை மேற்கொண்டார். அவர் மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலின் பரப்புரையை நிறுத்தி வைத்துவிட்டு இந்த ஆலோசனை மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி தமிழ்நாடு, கேரளா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் உடன் இன்று காலை காணொலிக் காட்சி மூலமாக தன்னுடைய ஆலோசனையை தொடர்ந்தார்.

இதில் இந்த நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்றார். தமிழக அரசு சார்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் காணொலிக் காட்சி மூலமாக தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே இதில் பங்கேற்று இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இந்த நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன மருத்துவ கட்டமைப்பு வசதிகள் என்னென்ன என்பது தொடர்பாக தலைமைச் செயலகம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார் தமிழ்நாட்டில் அனுதினமும் நடத்தப்படும் பரிசோதனைகள் காய்ச்சல் முகாம்கள் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகள் போன்றவற்றை பிரதமர் மோடியிடம் தெரிவித்து இருக்கிறார்.

அதோடு இந்த நோய் தொற்றினை தடுப்பதற்கு தமிழக அரசு சார்பாக எடுக்கப்பட்டு வரும் புதிய நடவடிக்கைகள் மற்றும் இந்த நோய் தடுப்பு பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டிருக்கும் புதிய ஐஓஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்பான தகவலையும் பிரதமர் நரேந்திர மோடியிடம் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்து இருக்கிறார்.மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசிடம் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.