கொரோனா நோயாளி மருத்துவமனையில் தற்கொலை!

Photo of author

By Parthipan K

கொரோனா நோயாளி மருத்துவமனையில் தற்கொலை!

Parthipan K

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள களம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இருசப்பன் (வயது 60). இவருக்கு கடந்த 12 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், நள்ளிரவு மருத்துவமனை அறையின் ஜன்னல் கம்பியில் லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து, அவரின் உடலை கைப்பற்றி விக்கிரவாண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.