மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை! பின்னணியின் மர்மம் என்ன?
கொரோனா தொற்றானது சென்ற வருடம் சீனாவில் உள்ள வுவன் பகுதியில் பரவி தற்போது அனைத்து நாடுகளையும் பெருமளவு பாதித்து வருகிறது.அதில் அதிக பாதிப்பு உள்ள நாடக அமெரிக்க,பிரேசில்,இந்தியா ஆகியவை உள்ளது.தமிழ்நாட்டில் முதலில் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டது.அப்போது மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் 50% மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கூறினர்.மக்கள் அனைவரும் தனிமனித இடைவெளி கடைப்பிடித்து,முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதித்தது.அதுமட்டுமின்றி மதம் சார்ந்த கூட்டங்கள்,திருவிழாக்கள் நடத்த தடை விதித்தது.இவ்வாறு பல கட்டுப்பாடுகளை நிறுவியும் கொரோனா தொற்று குறைந்த பாடு இல்லை.
ஓர் நாளில் மட்டும் இந்தியாவில்.2 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.தொற்று அதிகரித்துக்கொண்டே போவதால் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தினர்.இன்று முதல் அந்த இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையும்,வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது.பல கொரோனா நோயோளிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.அந்தவகையில் கொரோனா தொற்று உறுதியான ரங்கன் என்பவர் கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.
இன்று அவர் அறைக்கு மருந்து கொடுக்க சென்ற செவிலியருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.ஏனென்றால் இன்று அவர் அறையிலேயே சன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.அதன்பின் அப்பகுதி போலீசாருக்கு மருத்துவ நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர்.இவர் கொரோனா தொற்று உறுதியான மனக்கவலையால் தற்கொலை செய்துக்கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.கொரோனா தொற்று என்பது ஓர் வைரஸ் நோய் தான்,பாதித்தவர்கள் அனைவரும் மீண்டு வந்துவிடலாம் என உறுதியுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.