பிரதமருக்கே கொரோனா தொற்று உறுதியானது! அதிர்ச்சியளிக்கும் தகவல்
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும்பாலான நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் ஏறத்தாழ 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.
இவ்வாறு உலக அளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் கடந்த 4 மாதங்களாக 210 க்கும் அதிகமான நாடுகளை கடும் அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸின் கொடூர தாக்குதலுக்கு பொது மக்கள் மட்டுமல்லாமல் பல முக்கிய அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் முக்கியமாக சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து சில நாட்கள் அவர் வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்வதாக நாட்டு மக்களுக்கு அறிவித்திருந்தார்.
ஆனால் நாட்கள் ஆக அவரின் உடல்நிலை மேலும் பாதிப்படைந்ததையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவ்வாறு கொரோனா பாதிப்பிற்காக ஒரு வாரத்துக்கு மேலாக மருத்துவமனையில் எடுத்து கொண்ட சிகிச்சைக்கு பிறகு அவர் கடந்த வாரம் தான் வீடு திரும்பினார்.
இந்நிலையில் தற்போது அடுத்த அதிர்ச்சி தகவலாக உலக அளவில் முக்கிய தலைவராக விளங்கும் ரஷ்ய பிரதமர் மிக்கல் மிஸ்சுஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதையடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதாக அவர் நாட்டு மக்களிடம் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவின் மிக உயர்ந்த பதவியை வகித்து வரும் ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவது இதுதான் முதல் முறையாகும். இதற்கு முன்னர் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் கரோனாவால் பாதிக்கப்பட்டு அதற்காக மருத்துவமனையில் மேற்கொண்ட சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து தற்போது அவருடைய அலுவலகப் பணிகளை கவனித்து வருகிறார்.
இந்நிலையில் உலகளவில் 2-வது அதிகாரமிக்க தலைவர்களில் ஒருவரான ரஷ்ய பிரதமருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அந்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் காணொலி மூலம் கூறியதாவது, எனக்கு கரோனா பாஸிட்டிவ் என்று மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது. இது குறித்த தகவலை நான் அதிபர் புதினுக்கு தெரிவித்துவி்ட்டேன். இதனையடுத்து என்னை தனிமைப்படுத்திக்கொண்டாலும், அரசின் முக்கிய கொள்கை முடிவுகளில் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன். மேலும் என்னுடைய வேலைகளை தற்காலிகமாக துணைப் பிரதமர் ஆன்ட்ரி பெலுசோவ் கவனிப்பார்” என்றும் கூறியுள்ளார்.
54 வயதாகும் மிஷுஸ்டின் இதற்கு முன்னர் நிதியமைச்சராக பணியாற்றியுள்ளார். அதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் தான் அவர் ரஷ்யாவின் பிரதமராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.