கொரோனா தடுப்பு பணி! அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்த ஸ்டாலின்!

0
128

தற்போது நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் மிகத் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதோடு முன்கள பணியாளர்களும் சோர்வின்றி பணியாற்றி வருகிறார்கள்.இதற்கிடையில் இந்த தொற்றிற்கு முன்கள பணியாளர்களாக விளங்கிவரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் பலியாகி வருவது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த நிலையில் நோய் தடுப்பு பணிகளுக்காக 14 மாவட்டங்களுக்கு அமைச்சர்களை நியமனம் செய்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவ காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும், நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரே நாளில் சுமார் 28 ஆயிரத்து 897 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.அதோடு 136 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.இதற்கிடையில், முதலமைச்சராக புதிதாக பொறுப்பேற்ற இருக்கின்ற ஸ்டாலின் நோய்த்தடுப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் தந்து நடவடிக்கையை எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில், நேற்று காலை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின் தமிழ்நாட்டில் இனி ஒரு உயிரை கூட நாம் பலி கொடுக்க கூடாது என்று உரையாற்றியதாக தெரிகிறது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்னவென்றால், நோய் தொற்று அதிகமாக இருக்கின்ற மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தவும் அந்த பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தவும் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்த ஒருங்கிணைப்பு பணிகளை செய்வதற்கும் 14 அமைச்சர்களை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார் ஸ்டாலின்.

அதன்படி சென்னை மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் கோயமுத்தூர் மாவட்டத்தில் சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் சாமு.நாசர் அவர்களும், மதுரை மாவட்டத்தில் பி.மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.அதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். சேலம் மாவட்டத்தில் செந்தில் பாலாஜி அவர்களும், திருச்சியில் கே.என் நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு உள்ளிட்டோர், அதேபோல ஈரோடு மாவட்டத்தில் முத்துசாமி அவர்களும் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் சாமிநாதன் அவர்களும் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.மேலும் வேலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி அவர்களும், விழுப்புரம் மாவட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் செஞ்சி கே.எஸ் மஸ்தான் உள்ளிட்டோரும் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Previous articleதிட்டாமா அடிக்காம குணமா சொல்லணும்!! தமிழக டிஜிபி உத்தரவு!!
Next articleஇன்றைய சட்டசபை உறுப்பினர்களின் கூட்டத்தில் அதிரடி முடிவை எடுக்கப் போகும் அதிமுக!