மீண்டும் உட்சத்தை எட்டியது கொரோனா! பலி எண்ணிக்கை 30 லட்சம்….

0
125
Corona reaches the top again! The death toll is 30 lakh ....
Corona reaches the top again! The death toll is 30 lakh ....

மீண்டும் உட்சத்தை எட்டியது கொரோனா! பலி எண்ணிக்கை 30 லட்சம்….

கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்த நிலையில் தற்போது வரை சிறிதும் குறைந்த பாடு இல்லை.சென்ற வருடம் ஏழு மாதங்கள் ஊரடங்கு போட்டபோது மக்கள் வீட்டினுளே முடங்கி கிடந்தனர்.அதன்பின் சில மாதம் கொரோனா தொற்று குறைந்த நிலையில் இத்தொற்றோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என நடரேந்திர மோடி கூறினார்.அதன்பின் சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளலாம் என நரேந்த்திரமோடி கூறினார்,ஆனால் மக்கள் கொரோனாவை மறந்து வாழ ஆரம்பித்துவிட்டனர்.சென்ற ஆண்டை விட தற்போது கொரோனா 2 வது அலை உருவாகி அதிக அளவு தொற்றை பரப்பி வருகிறது.அந்தவகையில் ஓர் நாளில் மட்டும் தமிழ்நாட்டில் 1,200 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.அந்தவகையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 14.26 கோடியாக உள்ளது.

30 லட்சத்திற்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.இதில் 12.11 கோடி பேர் கொரோனா தொற்றால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இவ்வாறு படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.இந்தியாவில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.53 கோடியாக கடந்துள்ளது.அதனால் இந்தியாவில் தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் அம்மாநில அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

மகராஷ்டிராவில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுதயுள்ளனர்.தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கையும்,வார இறுதி நாளான ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளனர்.அதற்கடுத்து டெல்லி,குஜராத் போன்ற மாநிலங்களிலும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.

Previous articleமருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை! பின்னணியின் மர்மம் என்ன?
Next articleதங்கம் வாங்க இது தான் சரியான நேரம்! சவரனுக்கு ரூ.360 குறைவு!