இவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்! ஸ்டாலின் அதிரடி

Photo of author

By Anand

இவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்! ஸ்டாலின் அதிரடி

 

புதியதாக பதவியேற்றுள்ள தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியவற்றை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.அவர் அளித்த வாக்குறுதியில் அனைத்து குடும்பங்களுக்கும் கோரோனா நிவாரண நிதியாக 4000 வழங்கப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் கொரோனா நிவாரண நிதியாக அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்ற அறிவிப்பில் கையெழுத்திட்டார், இதில் முதல் தவணையாக ரூபாய் 2000 மே மாதமே வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது.இதில் யாரெல்லாம் பயனாளிகள் என்று பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்திருந்தது.

 

அதாவது இதற்கு முன் நிவாரண உதவி வழங்கும் போது கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புதியதாக வழங்கப்பட்ட ரேஷன் அட்டைகளை முறையாக கணக்கெடுத்துத்தான் நிவாரண உதவியை வழங்குவார்கள். ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு அனைவருக்கும் இந்த நிவாரண உதவி சென்றடைய வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.

 

அந்த வகையில் கடந்த 6 மாதங்களாகப் பெறப்பட்ட 2,14,950 புதிய ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் சேர்த்து ரூ.2000 வழங்கப்படும் என அதிரடி உத்தரவு பிறப்பித்ததுள்ளது. அவர்களுக்கும் தமிழக அரசின் இந்த உத்தரவு பொருந்தும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு அவர்களுக்கான நிவாரண தொகையாக 42,99,00,000 ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.