இனி கொரோனா பரிசோதனை இந்த மாதிரி பண்ணலாம்!! 3 மணி நேரத்தில் ரிசல்ட்! நாக்பூர் விஞ்ஞானிகள்

0
164

உப்புத் தண்ணீரால் வாய் கொப்பளிப்பதன் மூலம் கோரோணா பரிசோதனையை மேற்கொண்டு நோயை கண்டறியலாம் என நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர்.

 

கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள இந்தியா பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி பல மடங்கு அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில் மிக எளிமையான மற்றும் புதுமையான கொரோனா பரிசோதனை முறையை அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலிங் நாக்பூர், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம்(NEERI) விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர்.

 

வெறும் உப்பு தண்ணீரில் வாய் கொப்பளித்து அதை ஆர்டி – பிசிஆர் சோதனையை செய்து விரைவான முறையில் மிகவும் எளிமையாக நோயை கண்டறிய முடியும் என கணித்துள்ளனர்.

 

வெறும் 3 மணி நேரத்தில் சோதனையின் முடிவுகளை கண்டறியலாம். இதனால் கிராம மற்றும் பழங்குடியினருக்கு இந்த முறை எளிமையாக இருக்கும் என கூறுகின்றனர்.

 

இது பற்றி சுற்றுச்சூழல் வைராலஜி பிரிவு மூத்த விஞ்ஞானி, டாக்டர் கிருஷ்ணா கையர்னர்யிடம் கேட்ட பொழுது அவர் கூறியதாவது:

 

சளி பரிசோதனை முறைக்கு அதிக நேரம் எடுக்கிறது. மேலும், மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து சளி மாதிரிகளை மக்களிடம் இருந்து சேகரிக்க வேண்டியுள்ளதால், இது மக்களுக்கு அசவுகரியமான சூழலை உருவாக்குகிறத. மேலும், இதை பரிசோதனை மையத்துக்கு கொண்டு செல்ல நேரம் ஆகிறது. வாய் கொப்பளித்து, ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறை நோயாளிகளுக்கு எளிதாக உள்ளது மற்றும் முடிவுகளை 3 மணி நேரத்தில் அறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Previous articleஇவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு சிரஞ்சீவி கோரிக்கை!
Next articleஇன்று ஆசைகள் நிறைவேறும் நாள்! இன்றைய ராசி பலன்கள்