கொரோனா பரவல் எதிரொலி! இந்த இடத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இதனை செய்ய வேண்டும்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலை உருவானது.மேலும் அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. தற்போது தான் கொரோனா குறைந்த நிலையில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கினர்.
ஆனால் சீனாவில் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது.அதனால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.ஓமிக்ரானின் துணை வைரஸான பி.எப் 7 எனவும் கண்டறியப்பட்டுள்ளது.இந்த வைரஸானது மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது.இதனால் அமெரிக்கா, பெல்ஜியம், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், டென்மார்க், மற்றும் ஜப்பானில் மிக வேகமாக பரவிவருகின்றது.கடந்த அக்டோபர் மாதம் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளது.
இந்தியாவில் நான்கு பேருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.மத்திய அரசு முன்னதாகவே மாநில அரசுகளுக்கு செய்ய வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளது.நேற்று பிரதமர் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது.மற்ற வைரஸ் பாதிப்புகளை போலவே காய்ச்சல், இருமல் சோர்வு ஆகியன ஏற்படும்.மேலும் ஒரு சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்படலாம்.
இந்நிலையில் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.இதனை தொடர்ந்து டெல்லி ஆக்ரா தாஜ்மஹால்கு வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயமாக கொரோனா பரிசோதனை கட்டாயம் என ஆக்ரா மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.