மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு… 24 மணிநேரத்தில் 21000 பேர் பாதிப்பு!

0
143

மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு… 24 மணிநேரத்தில் 21000 பேர் பாதிப்பு!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைவதும் அதிகமாகவதுமாக உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்டி படைக்கிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையே மாறிவிட்டது.  நியு நார்மல் எனப்படும் புதிய வாழ்க்கை முறை கொரோனாவால் உருவாகிவிட்டது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்திருந்த நிலையில் இப்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 கோடிக்கும் மேல் உள்ளது.

கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. கடந்த வாரம் ஏறுமுகமாக சென்ற கொரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் குறையத் தொடங்கியது. ஆனால் நேற்று ஒருநாளில் மட்டும் 21000 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு மீண்டும் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. மேலும் புதிதாக 67 பேர் இறந்துள்ளனர்.

இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,997 ஆக உயர்ந்தது. கொரோனாவால் ஒரே நாளில் 20,726 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,31,71,653-ல் இருந்து 4,31,92,379 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து பல இடங்களிலும் தொற்று பாதுகாப்புகள் அதிகமாக்கப்பட்டுள்ளன.

Previous articleதனுஷை வச்சி செஞ்ச ஹாலிவுட் காரர்கள்…. தி கிரே மேன் பாத்துட்டு கடுப்பாகும் ரசிகர்கள்!
Next articleஸ்ரீமதியின் உடல் தகனம்! பொதுமக்கள் மற்றும் அமைச்சர் எம்எல்ஏக்கள் அஞ்சலி!