கொரோனா நிலவரம்!! வெகு நாட்களுக்கு பிறகு குறைந்தது கொரோனா!!
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது நாடு முவதும் தீவிரமாக பரவி திடீர் உச்சம் அடைந்தது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாகியது. இதை அடுத்து, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக தொடங்கியது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது மெல்ல மெல்ல கட்டுபாட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 125 நாட்களுக்குப் பிறகு இன்று குறைவான கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது,
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 30,093 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 3,11, 74, 322 ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் மேலும் 374 பேர் உயிர் இழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிர் இழப்பு எண்ணிக்கையானது 4,14,482 ஆக அதிகரித்து உள்ளது. கடந்த ஒரே நாளில் 45,254 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியே 03 லட்சத்து 53 ஆயிரத்து 710 ஆக உயர்வடைந்து உள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.32 % மாக உள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,06,130 பேர் ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 41,18,46,401 ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றின் மூன்றாம் அறையானது மிகவும் தீவிரமாக இருக்கும் எனவும், அதனால் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தப் படுகின்றனர்.